ஜெயம் ரவி படத்துக்கு சிவகார்த்திகேயனால் வந்த தடை !

Last Modified செவ்வாய், 23 ஜூலை 2019 (10:50 IST)
ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தை வெளியிட சில திரையரங்க உரிமையாளர்கள் தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அடங்கமறு வெற்றிக்குப் பின் ஜெயம் ரவியின் அடுத்தப்படமாக உருவாகியுள்ளது கோமாளி. ஆகஸ்ட் 15 அன்று வெளிவரவுள்ள இப்படத்தை திருச்சி, மதுரை விநியோக பகுதிகளில் உள்ள தியேட்டர்கள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இதன் தமிழக விநியோக உரிமையை சக்தி பிலிம்பேக்டரி வாங்கியுள்ளது. இந்நிறுவனம் கடைசியாக வெளியிட்ட மிஸ்டர் லோக்கல் திரைப்படம் தியேட்டர்களுக்கு 80% நஷ்டம் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதனால் அந்த நஷடத்தை சரி செய்யாமல் கோமாளிப் படத்தை   திரையிடுவதில்லை என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :