வெற்றிமாறன் படத்தில் ஹீரோவாகும் சூரி !

Last Modified வியாழன், 25 ஜூலை 2019 (09:10 IST)
வெற்றிமாறன் இயக்கும் அடுத்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் சூரி.

வடசென்னை  படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும்  அசுரன்  படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படம் வெக்கை என்ற நாவலிலிருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் கோவில்பட்டி சுற்றுவட்டாரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷுடன், மஞ்சு வாரியர், பசுபதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர்.

இந்தப்படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து சீரியஸான படங்களாக எடுத்துக் கொண்டிருக்கும் வெற்றிமாறன் அடுத்ததாக ஒரு நகைச்சுவைப் படம் எடுக்க இருப்பதாகவும் அந்த படத்தில்தான் சூரி கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தை கோ மற்றும் விண்ணைத் தாண்டி வருவாயா படங்களின் தயாரிப்பாளரான எல்ரெடு குமார் தனது ஆர்.எஸ்.இன்ஃபொடெய்ன்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். வெற்றிமாறன் வடசென்னை 2 படத்தைத் தற்போதைக்குக் கிடப்பில் போட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.இதில் மேலும் படிக்கவும் :