செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 31 ஜனவரி 2019 (13:40 IST)

சினிமாவில் நடிப்பவர் தலைவரல்ல...ரஜினியை சீண்டும் சீமான்...

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மேடையில் எப்போதும் காரசாரமாகப் பேசக்கூடியவர் .அவரது பேச்சுக்கு அவரது தொண்டர்கள்  கைதட்டி பெரும் ஆரவாரம் செய்து டிரெண்ட் ஆக்குவது வாடிக்கை. அதேபோல் சென்னையில் நடைபெற்ற மிகமிக அவசரம் என்ற படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.அப்போது ரஜினிகாந்தை கடுமையாக விமர்சனம் செய்தார்.
சென்னை வடபழனியில் நடைபெற்ற மிகமிக அவசரம் என்ற படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் சீமான் பேசியதாவது;
 
நடிகர் ரஜினிகாந்தை தலைவர் என்று அழைக்கிறார்கள் ... அப்படி என்றால் காமராஜர், கக்கன், பிரபாகரன் போன்றோர் சமூக விரோதிகளா ..இல்லை நக்சல்களா என்று கேள்வி எழுப்பினார். இது ரஜினியின் ரசிகர்களுக்கு பலத்த கோபத்தை உண்டாகியுள்ளது.
 
மேலும் 'நடிப்பவர் நடிகன் தானே தவிர தலைவர் கிடையாது. தற்போது தொலைக்காட்சிகளில் கூட ரஜினிகாந்த் என்று கூறுவதில்லை. தலைவர் என்றுதான் அழைக்கிறார்கள். தலைவர்  யார் என்று தெரியாமல் திரையரங்குகளில்தான் தற்போது தலைவர்களை தேடி வருகின்றனர் ’இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
ஏற்கனவே சீமான், நடிகர் விஜயை பற்றி கடுமையாக விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.