பொங்கல் வாழ்த்துக் கூறிய விஜய் பட நடிகை !
நடிகை மாளவிகா மோகனன் பொங்கல் பண்டிகைக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
விஜய் ,விஜய் சேதுபதி, நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
நேற்று வெளியாகி கோலிவுட், டோலிவிட், சாண்டல்வுட், பாலிவுட் என அத்தனை திரைத்துறையினரின் ஆதரவைப் பெற்று பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் முதல்நாள் வசூல் 27 கோடி என்று தகவல்கள் வெளியாகிறது. ஆனால் 50% சதவீத இருக்கைகள் உள்ள நிலையில் இத்தனை வசூல் செய்துள்ள படம் என்ற சாதனையை விஜய் படம் மாஸ்டர் நிகழ்த்தி உள்ளது.
மாஸ்டர் படத்தில் தனது அழகான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துள்ள திறமையான நடிகை மாளவிகா மோகனன். இவர் பொங்கல் பண்டிகைக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
இப்பொங்கல் தினத்தில் எல்லோரது வாழ்விலும் மிகச்சிறப்பானவைகள் வரட்டும் . மகிழ்ச்சியான பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.