செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 14 ஜனவரி 2021 (11:58 IST)

தமிழகம் வருகிறேன்: ராகுல் காந்தி டுவீட்

முன்னாள் காங்கிரஸ் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான ராகுல்காந்தி இன்று தமிழகம் வர இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். அது மட்டுமின்றி இன்று மதுரை அருகே அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியையும் அவர் நேரில் கண்டுகளிக்க உள்ளதாகவும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினையும் அவர் சந்தித்து பேச உள்ளதாக வெளிவந்த செய்தியைப் பார்த்தோம் 
 
இந்த நிலையில் சற்று முன் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று தமிழகம் வரவேற்பதாகவும் அனைவருக்கும் தனது பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்றும், மதுரை ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க இன்று தமிழகம் வருகிறேன் என ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்
 
தமிழகத்தில் தேர்தல் விரைவில் வர இருப்பதை அடுத்து தேசிய தலைவர்களின் வருகை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ராகுல் காந்தியின் வருகையும் அதை நோக்கித்தான் என்று கூறப்படுகிறது 
 
இன்று தமிழகம் வரும் ராகுல் காந்தி அவர்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பது மட்டுமின்றி அரசியல் ரீதியான சில முடிவுகளை எடுப்பார் என்றும் குறிப்பாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாகவும் திமுக கூட்டணி குறித்தும் அவர் உறுதி செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது