1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 14 ஜனவரி 2021 (10:13 IST)

காளையை அழைத்து வந்த 2 வயது சிறுமி – வைரலாகும் புகைப்படம்

ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காகத் தனது காளைய அழைத்து வந்தார் 2 வயது சிறுமி. இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.

இன்று தமிழர் திருநாளாம் தை முதல் நாள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது., இந்நிலையில் இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைத்தார்.

இப்போட்டியில் 430 மாடு பிடிவீரர்களும், 840 காளைகளும் பங்கேற்க உள்ளனர். மேலும் சுற்றுக்கு 50 வீரர்கள் என களமிறங்கவுள்ளனர்.
 

இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் குருநாதன் என்ற கிராமத்திற்குச் சொந்தமான காளையை 2 வயது சிறுமி உதயா தைரியமாக அழைத்து வந்தார்.