மனைவியுடன் வந்து ஓட்டளித்தார் நடிகர் விஜய் ஆண்டனி!

Papiksha Joseph| Last Updated: செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (13:27 IST)

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் சென்னையில் உள்ள திரையுலக பிரபலங்கள் தங்களது வாக்கு சாவடிகளில் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலும் தல அஜித் திருவான்மியூர் வாக்குச்சாவடியிலும்
ரஜினி ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலும் சிவகார்த்திகேயன் வளசரவாக்கம் வாக்குச்சாவடிகளில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

மேலும் திரையுலக பிரபலங்கள் பலர் வாக்குப் பதிவு செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது மனைவி பாத்திமா உடன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குசாவடிக்கு வந்து ஓட்டளித்துவிட்டு சென்றுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :