வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 27 மார்ச் 2021 (10:24 IST)

விடியும் முன் இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி!

விடியும் முன் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக வளர்ந்து வந்த காலத்தில் திடீரென நடிகர் அவதாரம் எடுத்தார் விஜய் ஆண்டனி. அவர் நடித்த நான், சலீம் ஆகிய படங்கள் சிறப்பாக ஓடியதால் வரிசையாக படங்களில் நடித்தார். 2016 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் அவரை கமர்ச்சியல் கதாநாயகனாக மாற்றியது. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் அந்த படம் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது.

இதையடுத்து அவருக்கென்று ஒரு மார்க்கெட் உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்போது அவர் வரிசையாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விடியும் முன் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் பாலாஜி குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ரித்திகா சிங் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படப்பிடிப்பை முடித்த பின்னரே படத்தைப் பற்றிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாம் படக்குழு.