அஜித் படத்தில் அக்‌ஷய் குமார் – கோலிவுட் கதைகளுக்கு பாலிவுட்டில் மவுசு !

Last Updated: சனி, 27 ஜூலை 2019 (16:04 IST)
அஜித் நடித்து கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான வீரம் படத்தின் பாலிவுட் ரீமேக்கில் அக்‌ஷய் குமார் நடிக்க இருக்கிறார்.

அஜித்- சிறுத்தை சிவா வெற்றிக் கூட்டணியின் முதல் படமாக அமைந்த வீரம் கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப்படத்தை ஏற்கனவே தெலுங்கில் பவன் கல்யாண் ரீமேக் செய்து நடித்துள்ளார். அதையடுத்து இப்போது இந்தப் படம் இப்போது இந்தியிலும் ரீமேக் ஆக இருக்கிறது.

ஏறகனவே தமிழிக் ஹிட்டடித்த காஞ்சனா படத்தை அக்‌ஷய்குமார் லஷ்மி பாம் என்ற பெயரில் அங்கு ரீமேக் செய்து நடித்து வருகிறார். இந்தப் படத்துக்காக  அக்‌ஷய் குமார் வேட்டியோடு இருக்கும் புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியயிட்டுள்ளது. இந்தப்படத்துக்கு பச்சன் பாண்டே எனப் பெயர் வைத்துள்ளனர். அடுத்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டில் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளப் படங்களை ரீமேக் செய்யும் வழக்கம் அதிகமாகி வருகிறது.


 இதில் மேலும் படிக்கவும் :