திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 29 ஆகஸ்ட் 2020 (23:01 IST)

நயன்தாரா படத் தயாரிப்பாளருக்கு கொரொனா …. கோலிவுட் அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பளருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கோலிவுட் வட்டாரம் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

தமிழகத்தி 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொற்றைக் குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

பிரபல சினிமா நட்சத்திரங்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்ட பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்  சினியா தயாரிப்பாளரான வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர், எல்.கே.ஜி,  என்னை நோக்கிப் பாயும் தோட்டா , மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.