விஜய் -65 ; ‘’ஊர் படப் புகழ்’’ இயக்குநருடன் மீண்டும் இணையும் நடிகர் விஜய் ???

Sinoj| Last Modified வியாழன், 29 அக்டோபர் 2020 (15:34 IST)

நடிகர் விஜய் -
இயக்குநர் பேரரசு ஆகிய இருவரும் மீண்டுமொரு படத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது


நடிகர் விஜய் – விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். சேவியர் பிரிட்டோ இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

இப்படத்தை அடுத்து விஜய் 65 படத்தை இயக்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்தபோது துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என்று அடுத்தடுத்து ஹிட் கொடுத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்கவுள்ளதாகவும் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.

vijay

ஆனால் இப்படத்தில் இடைவெளைக்குப் பிறகு கதையில் திருப்தி இல்லை என்ற விஜய் நிராகரித்ததாகத் தெரிகிறது.அதேபோல் ஏ.ஆர். முருகதாஸ் கேட்ட சம்பளத்தைக் கொடுத்த தயாரிப்பாளர் தரப்பு தயங்கியதாகவு தெரிகிறது.

இந்நிலையில் , விஜய்யின் 65 வது படத்தை திருப்பாச்சி, சிவகாசி ஆகிய படங்களை இயக்கிய பேரரசு இயக்கவுள்ளதாகத் தகவல்க வெளியாகிறது.

இது எந்த ஊரின் பெயர் இப்படத்தில் இடம் பெறப் போகிறதோ???இதில் மேலும் படிக்கவும் :