திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 24 அக்டோபர் 2020 (16:37 IST)

முருகதாஸ்தான் போயிட்டாரு… அப்ப விஜய் படத்தின் இயக்குனர் யார்?

விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் பொறுப்பில் இருந்து முருகதாஸ் விலகிவிட்ட நிலையில் இப்போது அந்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாஸ்டர் படத்துக்குப் பின்னர் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தை இயக்க இருந்த ஏ ஆர் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக முருகதாஸ் சொன்ன கதையில் இடைவேளைக்குப் பின் வரும் பகுதிகளில் தனக்கு முழு திருப்தி இல்லை என விஜய் சொன்ன நிலையில் அதற்காக கதையை மீண்டும் திருத்தி எழுதி போய் கூறியுள்ளார் முருகதாஸ். ஆனால் அப்போதும் விஜய்க்கு முழு திருப்தி இல்லை என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது அந்த படத்தில் இருந்து ஏ ஆர் முருகதாஸ் வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான காரணம் என்ன என்பது இன்னும் வெளியாகவில்லை. தயாரிப்பு நிறுவனத்துடனும் விஜய்யுடனும் முருகதாஸுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடே காரணம் என சொல்லப்படுகிறது.

இதனால் இப்போது விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. முருகதாஸை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு விஜய் பாண்டிராஜ், அருண்ராஜா காமராஜ், மகிழ் திருமேனி, வெற்றிமாறன், சுதா கொங்கரா, பாண்டிராஜ் மற்றும் வெற்றிமாறன் ஆகிய இயக்குனர்களிடம் கதை கேட்டிருந்தார். இப்போது அவர்களில் மகிழ் திருமேனியை இயக்குனராக்கலாம் என்ற முடிவில் விஜய் தரப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.