3 மெஹா ஹிட் படம் கொடுத்த இயக்குனரையே கழட்டிவிட்டாரே தளபதி! அதிருப்தியில் ரசிகர்கள்!
விஜய் நடிக்கும் அடுத்த படத்தை இயக்க இருந்த ஏ ஆர் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாஸ்டர் படத்துக்குப் பின்னர் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தை இயக்க இருந்த ஏ ஆர் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது சம்மந்தமாக முருகதாஸ் சொன்ன கதையில் இடைவேளைக்குப் பின் வரும் பகுதிகளில் தனக்கு முழு திருப்தி இல்லை என விஜய் சொன்ன நிலையில் அதற்காக கதையை மீண்டும் திருத்தி எழுதி போய் கூறியுள்ளார் முருகதாஸ். ஆனால் அப்போதும் விஜய்க்கு முழு திருப்தி இல்லை என சொல்லப்பட்டது.
இந்நிலையில் இப்போது அந்த படத்தில் இருந்து ஏ ஆர் முருகதாஸ் வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான காரணம் என்ன என்பது இன்னும் வெளியாகவில்லை. தயாரிப்பு நிறுவனத்துடனும் விஜய்யுடனும் முருகதாஸுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடே காரணம் என சொல்லப்படுகிறது.
இந்த செய்தியைக் கேட்ட விஜய் ரசிகர்கள் விஜய்யின் மார்க்கெட்டை பெரிய அளவில் விரிவு படுத்திய மூன்று படங்களான துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய படங்களைக் கொடுத்த முருகதாசையே விஜய் இப்படி கைவிட்டு விட்டாரே என்ற அதிருப்தியில் உள்ளனராம்.