திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 30 நவம்பர் 2019 (12:29 IST)

என்னா வேகம் ….மூன்றே மாதத்தில் முடியும் தளபதி 64 படப்பிடிப்பு – சபாஷ் வாங்கிய லோகேஷ் கனகராஜ் !

தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் முடிய உள்ளது.

டெல்லியில் படமாகப்பட்டு வரும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என தயாரிப்பு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. பிகில் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாத இறுதியில் தொடங்கியது. சென்னையில் ஆரம்பித்த படப்பிடிப்பு அதன் பின் டெல்லியில் நடைபெற்று வருகிறது. முழு மூச்சுடன் படப்பிடிப்பு நடந்து வருவதால் டிசம்பர் இறுதிக்குள் முழு படப்பிடிப்பும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருடக்கணக்கில் ஷூட் செய்து தயாரிப்பாளர்களுக்கு செலவை இழுத்துவிடும் இயக்குனர்கள் மத்தியில் லோகேஷ் விஜய் போன்ற மாஸ் ஹிரோக்களின் படத்தையே 3 மாதத்தில் முடித்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.