செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2019 (21:20 IST)

டெல்லியை அடுத்து கர்நாடகா செல்லும் தளபதி விஜய்!

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்றது
 
இந்த படப்பிடிப்பின்போது விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்த காட்சிகளும், ஒரு சில ஆக்சன் காட்சிகளும் மற்றுமொரு பாடல் காட்சிகளும் படமாக்கப்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து டெல்லி படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்து விட்டதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து, டெல்லியில் இருந்து சென்னைக்கு கிளம்பும் ஒரு புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் நடிகர் சாந்தனுவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் விஜய் உள்பட ’தளபதி 64’ படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பி விட்ட நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் கர்நாடகாவில் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் உள்ள பழமையான சிறைச்சாலையில் சிறை சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்காக சிறைச்சாலையில் முன்அனுமதி பெற்று விட்டதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
விஜய், மாளவிகா மேனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க,  சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, பிலோமினா ராஜ் படத்தொகுப்பு பணியை செய்கிறார். இந்த படம் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது