திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2019 (21:29 IST)

விஜய் படத்தின் ரீமேக்கில் ஹரிஷ் கல்யாண்!

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த சூப்பர்ஹிட் படம் ஒன்றின் தமிழ் ரீமேக்கில் பிக்பாஸ் புகழ் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
விஜய் தேவரகொண்டா நடிப்பில் அருண் பாஸ்கர் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பெல்லி சூப்பல்லா’. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஏற்கனவே ஒரு பிரபல இயக்குனர் முயற்சித்தார். இந்த படத்திற்காக விஷ்ணு விஷால் மற்றும் தமன்னா நடிக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் திடீரென அவரது ஒருசில படங்கள் பொருளாதார பிரச்சனையில் சிக்கியதை அடுத்து இந்த படத்தை கைவிட்டார்.
 
இந்த நிலையில் தற்போது வெறொரு தயாரிப்பு நிறுவனத்தின் முயற்சியில் தற்போது  ‘பெல்லி சூப்பல்லா’தமிழில் ரீமேக் ஆகிறது. ஹரிஷ் கல்யாண் மற்றும் ஒரு முன்னணி நாயகி இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். ஹரிஷின் நண்பர் கார்த்தி இயக்குனராக அறிமுகமாகும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கவுள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு வரும் டிசம்பரில் வெளியாகும்
 
ஹரிஷ் கல்யாண் நடித்த முடித்துள்ள ‘தனுசு ராசி நேயர்களே’ வரும் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அவர் தற்போது’தாராள பிரபு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஹிந்தியில் ஹிட்டான ‘விக்கி டோனார்’ என்ற படத்தின் ரீமேக் ஆகும். மேலும் சசி இயக்கும் ஒரு படத்திலும் ‘கசட தபற’ என்ற படத்திலும் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது