விஜயகாந்த் குறித்து நடிகர் கார்த்திக் பேசி இருந்தால் அது தவறு - நடிகர் உதயா
கரூர் அடுத்த வெள்ளியணை பகுதியில், உள்ள தனியார் மஹாலில், தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலையொட்டி, கரூர் மாவட்ட நாடக, நடிகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் துணை தலைவராக போட்டியிடும் நடிகர் உதயா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகை ஆர்த்தி, கணேசன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் பலர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இந்நிகழ்ச்சியின் முடிவில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் உபதலைவராக போட்டியிடும் நடிகர் உதயா செய்தியாளர்களை சந்தித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் வரும் 23 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் சுவாமி சங்கரதாஸ் அணியும் அதில் பாக்கியராஜ் தலைமையிலும், பொதுச்செயலாளராக ஐசரி கணேஷ் ம் நிற்கின்றனர். மேலும், பாண்டவர் அணி தற்போது வலுப்பெற்று உள்ளது என்றால் அதற்கு காரணம், ஐசரி கணேஷ் தான் என்றதோடு, நடிகர் பிரசாந்த் மற்றும் 23 செயற்குழு உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர். நிச்சயம் நாடக, நடிகர்களின் நன்மைக்காகவே, சுவாமி சங்கரதஸ் அணி போட்டியிடுகின்றது என்றதோடு, பல்வேறு நல்லத்திட்டங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம், மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் எங்கள் சுவாமி சங்கரதாஸ் அணிக்கு நல்ல வரவேற்பு கொடுக்கின்றனர். நான் யாரையும், எந்த நடிகர்களையும், புண்படுத்துவது போல பேசியது இல்லை, நேற்று கூட நடிகர் விஜயகாந்தின் தயவு எங்களுக்கு தேவை இல்லை என்று சேலத்தில் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
அப்படி கூறி இருந்தால் அது தவறு, ஏனென்றால் நடிகர் விஜயகாந்தினால் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு பெரும் உதவி கிடைத்தது. அப்போது நடிகர் சங்க கடனை அடைத்தது என்று பலவித திட்டங்களை கூறலாம், அவரை பற்றி நடிகர் கார்த்திக் பேசி இருந்தால் அது தவறு, ஏனென்றால், எம்.ஜி.ஆர். சிவாஜி, நடிகர் விஜயகாந்த் ஆகியோரால் தான் தென்னிந்திய நடிகர் சங்கமே வளர்ச்சி அடைந்தது என்றால் அது மிகையாகாது.
அனைத்து நடிகர்களிடம் எங்களுக்கு நட்பு இருக்கு, ஆனால் நிர்வாகம் என்று எடுத்துக் கொண்டால் எங்களது வழி தனிவழி, என்றார். மேலும், மதுரையில் நடிகர் சங்கம் கோரிக்கை வைத்தது. சேலத்திலும் கோரிக்கை வைத்தது. பதவியில் இல்லாமலேயே ஐசரி கணேசன் பல்வேறு திட்டங்களையும், பல்வேறு உதவிகளையும் செய்து வரும் நிலையில், பதவிக்கு வந்த பிறகு பல்வேறு நலத்திட்டங்களை சுவாமி சங்கரதாஸ் அணி செய்யும் என்றார்.