ஒத்தைக்கு ஒத்த வாடா! விஸ்வாசம் டிரைலர் விமர்சனம்
தல அஜித் நடித்த விஸ்வாசம் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களை களங்கடித்து வருகிறது.
வாழ்க்கையில ஒரு தடவை அழாத பணக்காரனும் இல்லை, ஒரு தடவை சிரிக்காத ஏழையும் இல்லை என்ற பஞ்ச் டயலாக்குடன் 'விஸ்வாசம்' டிரைலர் அட்டகாசமாக ஆரம்பமாகிறது.
கிராமத்து அழகின் பின்னணி, சேலையுடன் தலையில் புல்லுக்கட்டு தூக்கி வரும் நயன்தாராவின் அழகு, நீங்க பேரழகு என்று சொல்லி நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்வது, திருவிழா பின்னணி காட்சிகள் ஆகியவை குடும்ப ஆட்சியன்ஸ்களை கவரும்
கூண்டுக்குள் ஆக்ரோஷமான சண்டை, பங்காளிகளா அடிச்சு தூக்கலாமா? என்ற பஞ்ச் வசனத்துடன் ஆரம்பமாகும் ஸ்டண்ட், கபடி விளையாட்டு, என் கதையில நான் ஹீரோடா என்று சொலும் ஜெகபதிபாபுவிடம் 'என் கதையில நான் வில்லன்டா என்று சொல்லும் அஜித்தின் அதிரடி, பைக்கின் பின்சக்கரத்தால் வில்லனால் உதைப்பது, மற்றும் இறுதி காட்சியில் ஏறி மிதிச்சேன்னு வையி, ஏரியாவை இல்ல, மூச்சை கூட வாங்க முடியாது என்ற வசனங்களுடன் கூடிய காட்சிகள் ஆக்சன் பிரியர்களை கவரும்
இறுதியில் உங்க மேல கொலை கோவம் வரணும், ஆனால் உங்களை எனக்கு பிடிச்சுருக்கு சார் என்ற வசனம் யாருக்கோவான செய்தியாகவும் தெரிகிறது.
மொத்தத்தில் விஸ்வாசம் டிரைலர் மாஸாக இருப்பதால் சூப்பர் ஹிட் வெற்றி உறுதி என்றே தெறிகிறது.