1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 29 டிசம்பர் 2018 (20:43 IST)

இளமை திரும்புதே... கொண்டாட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அவருடன் அவரது மனைவி பிரேமலதாவும் சென்றார்.
 
தந்தை சிகிச்சைகாக அமெரிக்கா சென்றுள்ளதால் அவரது மகன் விஜய் பிரபாகரன் அரசியல் நிகழ்வுகளை முன்னெடுத்து வருகிறார். இது தேமுதிக தொண்டர்களுக்கு புது தெம்பை கொடுத்துள்ளது. 
 
இந்நிலையில், அமெரிக்கா சென்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த், அங்குள்ள நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார். இதுதொடர்பான படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 
 
முன்னதாக கடந்த ஜூலை மாதம் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். தற்போது இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.