1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 29 டிசம்பர் 2018 (21:47 IST)

விஸ்வாசம் கொல மாஸ் டிரெய்லர்: தல ரசிகர்கள் கொல வெறியோடு வெய்ட்டிங்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விஸ்வாசம். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இந்நிலையில் பொங்கலுக்கு விஸ்வாசத்துடன் மோதவுள்ள ரஜினியின் பேட்ட படத்தின் டிரைலர் நேற்று காலை வெளியாகி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது. 
 
இதனால், விஸ்வாசம் படத்தின் டீசர் எப்போது ரிலீசாகும் என்று அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது இவர்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நாளை 1.30 மணிக்கு விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் வெளியாகவுள்ளது என சத்திய ஜோதி தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
டீசரை கேட்டுவந்த தல ரசிகர்களுக்கு டிரெய்லர் கிடைத்துள்ளது பெரிய ட்ரீட்டாக இருக்கும். இதில், படத்தின் எடிட்டர் ரூபன் கொல மாஸாக ஒரு டிரெய்லர் வருது ட்விட் செய்து தல ரசிகர்களை கொல வெறியோடு காத்திருக்க வைத்துள்ளார்.