புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Updated : திங்கள், 12 ஜூலை 2021 (22:13 IST)

அஜித்தின் வலிமையில் பாடல் எழுதிய விக்னேஷ் சிவன்!

வலிமை படத்தில் அஜித்தின் ஓபனிங் பாடலை எழுதியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித்குமார் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் 2 ஆண்டுகள் முன்னரே தொடங்கிவிட்ட நிலையிலும் ஒரு அப்டேட் கூட வராமல் இருந்ததால் தொடர்ந்து அப்டேட் கேட்டு ரசிகர்கள் பல இடங்களில் போர்டு பிடித்து வந்தனர்.

‘இந்நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக நேற்று திடீரென வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. மோஷன் போஸ்டர் வெளியான சில மணி நேரங்களுக்குள்ளாக 1.50 லட்சம் லைக்குகளை தாண்டியது. இந்தியாவிலேயே அதிகம் லைக் செய்யப்பட்ட முதல் மோஷன் போஸ்டர் என வலிமை சாதனை படைத்துள்ளது. அதே அளவுக்கு இந்த மோஷன் போஸ்டர் மிகவும் மோசமாக இருப்பதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில் இந்த படத்தில் பணியாற்றியுள்ள கலைஞர்கள் பற்றிய விவரம் வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தில் அஜித்தின் அறிமுகப்பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே அஜித்துக்கு அதாரு அதாரு பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.