திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : செவ்வாய், 13 ஜூலை 2021 (22:36 IST)

நான் ஜெயித்ததால் ’வலிமை’ ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்.....பாஜக நிர்வாகி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் உருவாகிவரும் படம் வலிமை. இப்படத்தின் மோஸன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள நிலையில் பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் இதுகுறித்து ஒருதகவல் வெளியிட்டுள்ளார்.

தல அஜித் நடித்து முடித்துள்ள ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் சற்று முன்னர் இந்த ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது.

ஒரு நிமிடம் 23 விநாடிகள் ஓடும் இந்த போஸ்டரை அஜீத் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் உருவாக்கிக் கொண்டாடி வருகின்றனர். எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ்ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலு குட்டி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மிகப்பெரிய அளவில் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. இதுவரை 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதைப் பார்த்துள்ளனர். சுமார் 6 லட்சத்திற்கு இந்த மோசன் போஸ்டருக்கு லைக்குகள் கிடைத்துள்ளது. இது இந்தியாவில் அதிகம் விரும்பப்பட்ட மோஸன் போஸ்டர் என்ற சாதனை படைத்துள்ளது.,

இந்நிலையில் கோவை தெற்குத் தொகுதியில் நடிகர் கமல்ஹாசனை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக  நிர்வாகி வானதி சீனிவாசனிடம் தேர்தலுக்கு முன் அஜித் ரசிகர்கள் வலிமை பட அப்டேட் கேட்டனர். நேற்று வலிமை பட மோஸன் போஸ்டர் வெளியான நிலையில் இன்று வானதி சீனிவாசன், தான் வெற்றி பெற்றதால் வலிமை அப்டேட் வெளியாகியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.