திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 15 ஜூன் 2022 (21:24 IST)

விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணத்தில் மீண்டும் சர்ச்சை !

கடந்த ஜூன்9 ஆம் தேதி நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் சென்னை அடுத்துள்ள மகாபலிபுரத்தி நடந்தது.

இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இத்திருமணம் முடிந்து,  திருப்பதி கோயிலில் நயன்தாரா –விக்னேஷ் சிவன் இருவரும் சுமாமி தரிசனம் செய்தனர். அப்போது செருப்பு அணிந்து வந்ததாக சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில், மகாபலிபுரத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது மட்டுமின்றி, பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்த நிலையில், விக்னேஷ் சிவன்- நயன் தாரா த்ருமணம் நட்னத தால் பொதுமக்களை அனுமதிக்கவில்லை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.