1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 15 ஜூன் 2022 (21:23 IST)

அதிமுகவை காப்பாற்றும் தகுதி ஓபிஎஸ்-க்கு மட்டும்தான் உள்ளது: கோவை செல்வராஜ்

kovai selvaraj
அதிமுகவை காப்பாற்றும் தகுதி ஓபிஎஸ்-க்கு மட்டும்தான் உள்ளது: கோவை செல்வராஜ்
அதிமுகவை காப்பாற்றும் தகுதி ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு மட்டும்தான் உண்டு என கோவை செல்வராஜ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என கடந்த சில நாட்களாக தொண்டர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை அடுத்து ஒற்றை தலைமைப் பதவியைப் பிடிப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் போட்டி போட்டு வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் ஓ பன்னீர் செல்வம் அவர்களுக்கு ஆதரவு குவிந்து வருவதாக கூறப்படும் நிலையில் அதிமுகவை காப்பாற்றும் தகுதியும் பொறுப்பும் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு மட்டும்தான் உள்ளது என கோவை செல்வராஜ் கூறியுள்ளார் 
 
மேலும் ஜெயகுமார் அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் இல்லை என்றும் ஜெயகுமார் கூறியது அவரது சொந்த கருத்து என்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் கூறியுள்ளார்.