வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 9 ஜூன் 2022 (09:01 IST)

”இன்று ஜூன் 9…” திருமண நாளில் விக்னேஷ் சிவனின் நெகிழ்ச்சியான பதிவு!

நட்சத்திர ஜோடிகளான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடக்கிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் இன்று நடைபெற உள்ளது. மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெறும் இந்த திருமணத்திற்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த திருமணத்தில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு செல்போன் அனுமதி கிடையாது என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் நயன்தாராவை கரம் பிடிக்க உள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.