வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 9 ஜூன் 2022 (08:24 IST)

அழைப்பிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதி: நயன்தாரா திருமணத்தில் கெடுபிடி

nayanthara
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடைபெற்று வருவதை அடுத்து இந்த திருமணத்தில் கலந்து கொள்பவர்களிடம் அழைப்பிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது
 
இன்று சென்னையில் அருகே உள்ள மகாபலிபுரத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெறுகிறது 
 
இந்த திருமணத்திற்காக தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அழைப்பிதழ் வைத்து அவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் கூறப்படுகிறது 
இன்னும் சில நிமிடங்களில் விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு தாலி கட்டுவார் என்பது குறிப்பிடத்தக்கது