1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 29 மே 2021 (11:05 IST)

’நெற்றிக்கண்’ அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன்!

நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான நெற்றிக்கண் படத்திலிருந்து ‘இதுவும் கடந்து போகும்’ என்ற பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. 

 
நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான திரைப்படம் நெற்றிக்கண். ரவுடி பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. மிலிண்ட் ராவ் என்ற புதுமுக இயக்குனர் கதை, வசனம், எழுதி, இயக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முடிந்து விட்டது.  
 
ரிலிஸுக்கு தயாரான நிலையில் கொரோனா இரண்டாவது அலை பரவல் மிக அதிகமாக இருப்பதால் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த படத்தை ஓடிடிக்குக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது நெற்றிக்கண் படக்குழு. 
 
2011 ஆண்டு வெளிவந்த கொரிய மொழி படமான ப்ளைண்ட் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் நெற்றிக்கண் ஆகும். கண் பார்வை இல்லாத ஒரு பெண், தன்னுடைய மற்ற திறன்களைப் பயன்படுத்தி ஒரு சீரியல் கொலையாளியைக் கண்டுபிடிப்பதுதான் இப்படத்தின் கதைக்களம். 
 
இந்நிலையில், இந்த படத்திலிருந்து ‘இதுவும் கடந்து போகும்’ என்ற பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. ‘இதுவும் கடந்து போகும்’ பாடலை பிரபல பிண்ணனி பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.