வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 28 மே 2021 (00:10 IST)

நயன்தாரா , கீர்த்திசுரேஷ் உள்ளிட்ட நடிகைகளின் சம்பளப் பட்டியல் !

தென்னிந்திய சினிமாவில் நடித்துவரும் முன்னணி நடிகைகளின் சம்பளம் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

நயன்தாரா ஒரு படத்திற்கு ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை பெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர் தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் அண்ணாத்த போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

அனுஷ்கா ரூ.3 கோடி சம்பளம் பெறுகிறார்.  சமந்தா ஒரு படத்திற்கு ரூ.3 கோடி சம்பளம் பெருகிறார். இவரது நடிப்பில் ஃபேமிலி மேன் வெப் தொடர் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தகக்து.

கீர்த்தி சுரேஷ் ரூ.3 கோடி சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகீறது. இவர் தற்போது அண்ணாத்த, சாணிக்காகிதம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அடுத்து, காஜல் அகர்வால் ரூ. 2 கோடி சம்பளம் பெருகிறார். இவர் கமல்ஹாசனுடம் இந்தியன்2,  சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், தமன்னா, ஸுருதிஹாசன் உள்ளிட்டோர் ரூ.1 கோடி சம்பளம் பெருவதாகக் கூறப்படுகிறது.