12 வருடங்களுக்குப் பிறகு அஜித் படத்தில் அர்ஜுன்… லேட்டஸ்ட் ‘விடாமுயற்சி’ அப்டேட்!
துணிவு படத்துக்குப் பிறகு அஜித் மகிழ் திருமேனி இயக்கும்விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் இன்னும் அடுத்த கட்ட பணிகள் நடக்கவில்லை. ஷூட்டிங் எப்போது என்பதும் தெரியவில்லை.
இந்த படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகின. மேலும் படத்தின் ஷூட்டிங் ஐதராபாத் மற்றும் பூனே உள்ளிட்ட இடங்களில் நடக்கும் எனவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது லண்டனில் முழு ஷூட்டிங்கையும் நடத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் அஜித்துடன் ஏற்கனவே மங்காத்தா படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமன்னா, த்ரிஷா மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோரும் விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார்கள் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.