செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (07:38 IST)

மொத்தமாக மாறுகிறதா விடாமுயற்சி ஷூட்டிங் திட்டம்? லேட்டஸ்ட் தகவல்!

அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தில் இப்போது கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் இன்னும் அடுத்த கட்ட பணிகள் நடக்கவில்லை. ஷூட்டிங் எப்போது என்பதும் தெரியவில்லை.

இந்த படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகின. மேலும் படத்தின் ஷூட்டிங் ஐதராபாத் மற்றும் பூனே உள்ளிட்ட இடங்களில் நடக்கும் எனவும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது வேறு விதமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

படத்தின் முழு ஷூட்டிங்கையும் லண்டனில் நடத்தலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இடைவெளியின்றி ஒரே தடவையாக 100 நாட்கள் ஷூட்டிங்கை முடிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.