வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 24 மே 2023 (20:47 IST)

மூத்த நடிகை லதாவுக்கு ஐக்கிய அமீரகம் அரசு கவுரவம்

actrress latha
தமிழ் சினிமாவில் மூத்த நடிகை லதாவுக்கு  ஐக்கிய அமீரகம் அரசு கவுரவம் அளித்துள்ளது.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகை லதா. இவர் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன், நேற்று இன்று நாளை, உரிமைக்குரல், ஆயிரம் ஜென்மங்கள், நீயா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

இந்த  நிலையில், ஐக்கிய அமீரகம் அரசு இந்திய சினிமா பிரபலங்களுக்கு கோல்டன் விசா வழங்கிக் கவுரப்படுத்தி வரும் நிலையில், நடிகை லதாவுக்கும் ஐக்கிய அமீரகம் அரசு கோல்டன் விசா வழங்கி சிறப்பித்துள்ளது.

ஏற்கனவே, இந்தி திரையுலகைச் சேர்ந்த சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்,  சஞ்சய் தத் ஆகியோருக்கு இந்த கோல்டன்விசா வழங்கப்பட்டுள்ளளது.

அதேபோல், தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களான மம்முட்டி, மோகன்லால், விஜய் சேதுபதி, கமல்ஹாசன், விக்ரம், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பலருக்கும் இந்த விசா வழங்கி சிறப்பித்துள்ள  நிலையில்,  தற்போது மூத்த நடிகை லதாவும் இந்த கோல்டன் விசாவை வழங்கப்பட்டுள்ளது.

நடிகை லதாவின் 50 ஆண்டுகால சாதனைகளை சிறப்பிப்பிக்கும் வகையில், இந்த கோல்டன் விசா வழங்கியுள்ளதாக ஐக்கிய அமீரகம் தெரிவித்துள்ளது.