திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : சனி, 28 ஏப்ரல் 2018 (12:41 IST)

‘மாஸ்’ தோல்வி குறித்து வெங்கட் பிரபுவின் பதில் என்ன தெரியுமா?

‘மாஸ்’ தோல்வி குறித்து ட்விட்டரில் ஒருவர் அடித்த கமெண்டுக்குப் பதில் அளித்துள்ளார் வெங்கட் பிரபு.
 
வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘சென்னை 28’ ரிலீஸாகி, நேற்றுடன் பதினோரு வருடங்கள் ஆகின்றன. அவருடைய ரசிகர்கள் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொண்டாடினர்.
 
அதில் ஒருவர், ‘‘மாஸ் படம் கொடுத்து மார்க்கெட்டை டேமேஜ் பண்ணதும் அவருதான்” என கமெண்ட் செய்திருந்தார்.
 
அதற்கு, “வெற்றி, தோல்வி எல்லாம் சகஜம் ப்ரோ. எந்த ஒருவன் வெற்றியை மட்டுமே சந்திக்கிறான் சொல்லுங்க. அப்படித்தான் நீங்கள் வாழ்க்கையை பேலன்ஸ் பண்ண முடியும்” எனப் பதில் அளித்துள்ளார் வெங்கட் பிரபு.
 
‘மாஸ்’ என்று முதலில் பெயர் வைக்கப்பட்ட இந்தப் படம், பின்னர் ‘மாசு என்கிற மாசிலாமணி’ எனப் பெயர் மாறியது. சூர்யா ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், நயன்தாரா மற்றும் பிரணிதா என இரண்டு ஹீரோயின்கள் நடித்தனர்.