1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 24 டிசம்பர் 2021 (15:46 IST)

மாநாடு வெற்றியை தொடர்ந்து வருகிறது வெங்கட் பிரபு 10 அப்டேட்!

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மன்மதலீலை என்ற படத்தின் அறிவிப்பு வெகு விரைவில் வர உள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது மாநாடு. இதனால் வெங்கட்பிரபு இப்போது இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக மாறியுள்ளார். இந்நிலையில் அவரின் அடுத்த படம் என்ன என்பது குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதையடுத்து மாநாடு படத்தின் தாமதத்தால் ஏற்கனவே அசோக் செல்வனை வைத்து அவர் மன்மத லீலை என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார். அடுத்து அந்த படத்தைதான் வெளியிட உள்ளாராம். இதுவரை 9 படங்களை இயக்கியுள்ள வெங்கட்பிரபு இயக்கும் 10 ஆவது படம். தற்போது VP10 என அழைக்கப்படும் இந்த படத்தின் அறிமுகத்தை விரைவில் வெளியிட உள்ளாராம். இந்த படத்துக்கு துணைத் தலைப்பாக a venkat prabhu quicky என்று பெயர் வைத்துள்ளாராம்.