செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 22 டிசம்பர் 2021 (12:47 IST)

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தை தயாரிக்கும் நிறுவனம் அறிவிப்பு!

வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி நிலையில் அவருடைய அடுத்த படத்தை தயாரிக்கும் நிறுவனம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
 
சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்த மாநாடு திரைப்படத்தை இயக்கிய வெங்கட்பிரபுவுகு பல வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று ரஜினி நடிக்கும் படம் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை தான் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி இணைந்து தயாரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.