வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : செவ்வாய், 10 ஜனவரி 2023 (16:19 IST)

துணிவு vs வாரிசு ஒரே நாளில் ரிலீஸ்… டிவிட்டரில் வெங்கட்பிரபு செய்த மாற்றம்!

துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரு திரைப்படங்களும் நாளை முதல் வெளியாக உள்ளன.

அஜித் நடித்த துணிவு மற்றும் விஜய் நடித்த வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் நாளை வெளியாக உள்ளன. துணிவு திரைப்படம் அதிகாலை ஒரு மணிக்கும், வாரிசு திரைப்படம் அதிகாலை 5 மணிக்கும் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு பலமுறை இவர்களின் படங்கள் ஒன்றாக ரிலீஸ் ஆகி இருந்தாலும், இப்போது அவர்களின் மார்க்கெட் பல மடங்கு விரிவாகி இருப்பதால் திரையுலகமே இந்த மோதலை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துள்ளது.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் விஜய் மற்றும் அஜித்தோடு தான் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய புரொபைல் புகைப்படமாக மாற்றியுள்ளார். அந்த புகைப்படம் மங்காத்த ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.