1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 10 ஜனவரி 2023 (12:58 IST)

'வாரிசு’ இலவச டிக்கெட் வேண்டுமா? ஒரே ஒரு நிபந்தனை விதிக்கும் விஜய் மக்கள் இயக்கம்!

varisu
தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல்நாள் காட்சிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனையாகி முடிந்துவிட்டது.
 
இருப்பினும் இந்த படத்தின் டிக்கெட் யாரிடமிருந்தாவது கிடைக்குமா என விஜய் ரசிகர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த விஜய் ரசிகர்கள் ரத்த தானம் செய்தால் வாரிசு படத்தின் டிக்கெட் இலவசமாக தருவதாக அறிவித்து உள்ளனர்
 
இதில் ஏராளமான விஜய் ரசிகர்கள் ரத்ததானம் செய்து வாரிசு படத்தின் டிக்கெட் பெற்று வருவதாக கூறப்படுகிறது. வாரிசு படத்தின் ரிலீஸின்போது சமூக பணியை செய்து வரும் விஜய் ரசிகர்களுக்கு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva