1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 10 ஜனவரி 2023 (16:02 IST)

டிரைலர் தாண்டியும் சீக்ரெட் இருக்கு நண்பா… வாரிசு இயக்குனர் வம்சி தகவல்!

வாரிசு திரைப்படத்தில் டிரைலரில் பார்த்ததை விட நிறைய சீக்ரெட்ஸ் இருக்கு என வம்சி கூறியுள்ளார்.

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் விஜய்யின் வாரிசு திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாரிசு திரைப்படமும் ஜனவரி 11 ஆம் தேதியே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ரிலீஸான வாரிசு திரைப்படத்தின் டிரைலர் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. குடும்ப படமான இதன் டிரைலர் மெகா சீரியல் போல இருப்பதாக நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் சமீபத்தில் வாரிசு இயக்குனர் வம்சி அளித்த நேர்காணலில் “டிரைலரில் பார்த்தது மட்டும் படம் இல்லை. உள்ளே நிறைய சஸ்பென்ஸ் இருக்கு” எனக் கூறி ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்றியுள்ளார்.