திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 10 ஜனவரி 2023 (13:29 IST)

லீக் ஆனதா துணிவு படத்தின் காட்சிகள்? – அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்!

துணிவு படத்தின் டைட்டில் கார்டு உள்ளிட்ட சில காட்சிகள் சமூக வலைதளங்களில் லீக் ஆனதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்குமார் நடித்து எச்.வினோத் இயக்கியுள்ள படம் ‘துணிவு’. இந்த படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் நிலையில் விஜய்யின் ‘வாரிசு’ படமும் அதே தேதியில் வெளியாகிறது. நாளை இந்த இரண்டு படங்களும் வெளியாகும் நிலையில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.


இந்நிலையில் தற்போது துணிவு படத்தின் ‘சில்லா சில்லா’ பாடலில் இருந்து சில காட்சிகளுடன் கூடிய ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது. மேலும் துணிவு படத்தின் டைட்டில் கார்டு உள்ளிட்ட சில காட்சிகள் சமூக வலைதளங்களில் லீக் ஆனதாக தகவல்கள் கசிந்துள்ளது. இது அஜித் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. துணிவு படத்தை முறைகேடாக ஆன்லைனில் வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடையும் விதித்துள்ளது.

லீக் ஆகும் காட்சிகளை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என சக அஜித் ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Edit by Prasanth.K