திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 22 செப்டம்பர் 2021 (10:36 IST)

ரே டொனோவன் ரீமேக்கில் ராணா, வெங்கடேஷ்! – உருவாகிறது புதிய ஆக்‌ஷன் படம்!

பிரபலமான ஆங்கில வெப்சிரிஸின் ரீமேக்கில் தெலுங்கு நடிகர் ராணா, வெங்கடேஷ் இணைந்து நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட்டில் 2013 முதலாக வெளியாகி வரும் பிரபலமான டிவி தொடர் ரே டொனோவன். இந்த தொடர் இதுவரை 7 சீசன்கள் வெளியாகி பிரபலமாக உள்ளது. இந்த வருடத்தில் இந்த இணைய தொடர் ஹாலிவிட்டில் படமாகவும் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இந்த கதையை இந்தியாவில் ரீமேக் செய்ய நெட்ப்ளிக்ஸ் திட்டமிட்டுள்ளது. ஆக்‌ஷன் அதிரடி கதையான இதற்கு ராணா நாயுடு என பெயரிடப்பட்டுள்ளது.

இதை நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் நிலையில் இதில் தெலுங்கில் பிரபலாமான நடிகர்களான ராணா டகுபாதி மற்றும் வெங்கடேஷ் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த புதிய படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.