இழுத்துக் கொண்டே செல்லும் விடுதலை படப்பிடிப்பு!
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தின் படப்பிடிப்பு நவம்பர் இறுதி வரை செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது.
தனுஷுடனான அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படம் விஜய் சேதுபதியின் வருகைக்கு பின்னர் அதற்கான மார்க்கெட் இப்போது அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் செய்யலாம் என தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். இதனால் 5 மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகலாம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் குறுகிய கால திட்டமாக தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு காடுகளில் நடப்பதால் இழுத்துக் கொண்டே செல்கிறதாம். நவம்பர் இறுதி வரை படப்பிடிப்பு உள்ளதால் அடுத்து வெற்றிமாறன் இயக்க இருந்த வாடிவாசல் படம் மேலும் சில மாதங்கள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.