பிக்பாஸ் டைட்டிலை வெல்ல ஆரி செய்த ராஜதந்திரம்: வேல்முருகன்

பிக்பாஸ் டைட்டிலை வெல்ல ஆரி செய்த ராஜதந்திரம்: வேல்முருகன்
siva| Last Modified வெள்ளி, 22 ஜனவரி 2021 (16:34 IST)
பிக்பாஸ் டைட்டிலை வெல்ல ஆரி செய்த ராஜதந்திரம்: வேல்முருகன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை ஆரிதான் வெல்வார் என கடந்த ஐம்பது நாட்களுக்கு முன்னரே பார்வையாளர்கள் கணித்துவிட்டனர் என்பதும், பார்வையாளரின் கணிப்பின்படி கடந்த ஞாயிறு அன்று பிக்பாஸ் டைட்டில் பட்டத்தை
ஆரி வென்றார் என்பதும் தெரிந்ததே

இதனையடுத்து ஆரிக்கு சக போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் திரையுலகினர் அரசியல் வாதிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் டைட்டில் வெல்ல ஆரி ஒரு இராஜதந்திரத்தை பயன்படுத்தியதாக சக போட்டியாளராக வேல்முருகன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

அனைவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை போட்டியாளர் கண்ணோட்டத்தில் பார்த்து வந்தனர் என்றும், ஆனால் ஆரி மட்டும் வெளியில் இருந்து பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியை எப்படி பார்ப்பார்கள் எப்படி யோசிப்பார்கள் என ராஜ தந்திரத்துடன் கடைசிவரை விளையாடினார் என்றும் அதனால்தான் அவர் டைட்டிலை வென்றுள்ளார் என்றும் கூறியுள்ளார்

ஒருவேளை ஆரி பிக்பாஸ் வீட்டில் இல்லாமல் இருந்திருந்தால் நான் தான் டைட்டில் பட்டத்தை வென்று இருப்பேன் என்றும் கோபத்தை மட்டும் கொஞ்சம் கட்டுபடுத்தி இருந்தால் பாலாஜியும் டைட்டில் வென்றிருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்


இதில் மேலும் படிக்கவும் :