செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 21 ஜனவரி 2021 (14:14 IST)

ஜித்தன் ரமேஷ் வீட்டில் அறந்தாங்கி நிஷா: வைரல் புகைப்படங்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனாவின் அன்பு குரூப்பில் 6 பேர் இருந்தனர் என்பதும் அவர்களில் ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா ஆகிய இருவரும் உண்டு என்பதும் தெரிந்ததே 
 
குறிப்பாக ஜித்தன் ரமேஷின் உடைகளைத் துவைத்து தருவதும் அவருக்கு பணிவிடை செய்து தருவதிலும் நிஷா ஈடுபட்டு இருந்தார் என்றும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னரும் அன்பு குரூப்பினர் ஒருவருக்கொருவர் நட்புடன் பழகி வந்தனர் என்பது குறித்த செய்திகள் வெளியானது
 
இந்த நிலையில் தற்போது ஜித்தன் ரமேஷ் வீட்டுக்கு நிஷா சென்றதாகவும் அவரை அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதுமட்டுமின்றி ஜித்தன் ரமேஷ் வீட்டில் அவரது குடும்பத்தினருடன் சந்தோஷமாக எடுத்து கொண்ட புகைப்படங்களையும் நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பதும் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த பதிவில் நிஷா பதிவு செய்திருப்பதாவது: காரணம் இல்லாமல் களைந்து போக இது கனவும் இல்லை. காரணம் சொல்லி பிரிந்து போக இது காதலும் இல்லை. உயிர் உள்ள வரை தொடரும் உண்மையான"நண்பன் டா