வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 21 ஜனவரி 2021 (09:09 IST)

சீக்கிரம் பார்க்க வாங்க அண்ணா – ஆரிக்கு நெகிழ்ச்சி வீடியோ வெளியிட்ட ஆதரவற்ற குழந்தைகள்!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஆரி நேர்மையாக விளையாடி மக்கள் மனதை வென்று முதல் இடத்தை பிடித்து டைட்டில் வென்றார். இதில் 16.5 கோடி வாக்குகள் பெற்ற ஆரி பாலாவை விட 10 கோடி வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்துள்ளார்.
 
அவரது வெற்றியை கொண்டாடிய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் , பாராட்டுக்களையும் தெரிவித்தனர். அந்தவகையில் தற்ப்போது ஆரி டைட்டில் வென்றதை கொண்டாடும் வகையில் ஆரியின் ரசிகர்கள் அவரது பெயரில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கியுள்ளனர். 
 
கேக் வெட்டி அவரது வெற்றியை கொண்டாடிய அந்த குழந்தைகள் அவரை பாராட்டி வாழ்த்து சொல்லி எங்களை சீக்கிரம் வந்து எங்களை பாருங்க அண்ணா என  ஆசையோடு கூறியுள்ளனர். இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆரிக்கு கிடைத்த வெற்றியின் மதிப்பை எண்ணி அவரது ரசிகர்கள் பெருமிதம் அடைந்துள்ளனர்.