செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (13:09 IST)

’வாத்தி’ படப்பிடிப்பில் கலந்து கொண்ட சம்யுக்தா: புகைப்படம் வைரல்

தனுஷ் நடித்துவரும் ’வாத்தி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படப்பிடிப்பில் இன்று முதல் கலந்து கொள்வதாக நாயகி சம்யுக்தா அறிவித்துள்ளார் இதுகுறித்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் படம் தமிழில் ’வாத்தி’ என்றும் தெலுங்கில் சார் என்றும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த போஸ்டரில் மாணவர் போன்ற தோற்றத்தில் தனுஷ் காட்சி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் தான் கலந்து கொண்டு இருப்பதாகவும் படப்பிடிப்பில் கலந்து கொள்வது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.