1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 7 ஜனவரி 2022 (15:45 IST)

தனுஷின் முதல் ஹாலிவுட் பட ரிலீஸ் அப்டேட்!

தனுஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் க்ரே மேன் படம் ஜுலை மாதம் நெட்பிளிக்ஸில் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தனுஷ் நடித்து முடித்துள்ள ’கர்ணன்’ மற்றும் ’ஜகமே தந்திரம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன. இந்நிலையில் அவர் இப்போது அமெரிக்காவில் அவர் நடிக்கும் த க்ரே மேன் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். அந்த படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புக்காக மார்ச் மாதத்தில் இரண்டு மாதங்கள் அமெரிக்கா சென்று அங்கு காட்சிகளில் நடித்து வந்தார்.

இப்போது படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துள்ள நிலையில் இந்த படத்தை ஜூலை மாதம் வெளியிட நெட்பிளிக்ஸ் திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.