செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 5 மார்ச் 2021 (21:38 IST)

மாநில அளவில் ....நடிகர் அஜித்குமார் புதிய சாதனை….

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் துப்பாக்கி சுடுதலில் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். இதுகுறித்த தகவல்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது வலிமை என்ற படத்தில்  நடித்துவருகிறார். இப்படத்தை ஹெச். வினோத் இயக்கி வருகிறார்.#ThalaAjith

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் பைக் ரேஸ், கார் ரேஸ், ட்ரோன் போன்றவற்றில் எந்தளவு ஆர்வமுடன் உள்ளாரோ அதேபோல் துப்பாக்கி சுடுதல் பயிற்சியிகளிலும் அவர் அவ்வப்போது ஈடுபட்டுவந்தார்.

அவரது கடினப் பயிற்சிக்கு தற்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. தமிழ்நாடு மாநில து40 வது துப்பாக்கி சுடுதல் சேம்பியன்சிப் போட்டிக்கு நடிகர் அஜித்குமார் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.