திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 26 அக்டோபர் 2022 (15:16 IST)

அஜித்தின் ''துணிவு'' குடியரசு தினத்தன்று ரிலீஸா?

Thunivu
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் உருவாகி வரும் துணிவு படதிதின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக  குடியரசு தினத்தன்று ரிலீஸாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அஜித் நடித்துவரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட பணியான டப்பிங் தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. சென்னையில் உள்ள முக்கிய டப்பிங் தியேட்டரில் சமீபத்தில் துணிவு படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கத்திற்கான பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், வரும் ஜனவரியில் பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு படத்துடன், அஜித்தின் துணிவு படம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், இப்படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் தொடர்ந்து வருவதால், இப்படம் வாரிசு படத்துடன் வெளியாகாது என தெரிகிறது.

எனவே,வரும்  ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று வெளியாக வாய்ப்புள்ளதாக  தகவல் வெளியாகிறது. ஆனால், நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு பொங்கலுக்கு விஜய் படத்துடன் துணிவு படம் மோத வேண்டுமென ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ள நிலையில், இப்படத்தை அன்று ரிலீஸ் செய்ய போனிகபூர் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Sinoj