1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 8 ஜூன் 2020 (17:54 IST)

தமிழக அரசு முழு வீச்சில் செயல்படுகிறது” - நடிகர் வரதராஜன் திடீர் பல்டி

தமிழக அரசு முழு வீச்சில் செயல்படுகிறது”
தொலைக்காட்சி நடிகர் மற்றும் செய்தி வாசிப்பாளர் வரதராஜன் அவர்கள் நேற்று தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில் தனது நண்பர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சென்னையில் எந்த மருத்துவமனையும் பெட் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார் 
 
இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில் தவறான தகவலை அளித்த வரதராஜன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை செய்தார். இந்த நிலையில் வரதராஜன் தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்
 
இந்த வீடியோவில் தான் பதிவுசெய்த முந்தைய வீடியோவில் ஒரு சில மருத்துவமனைகளில் இடமில்லை என்று தான் கூறியதாகவும், அதன் பின்னர் தனது நண்பருக்கு ஒரு மருத்துவமனையில் பெட் கிடைத்தது என்றும் இதனை அடுத்து அவர் தற்போது குணமாகி வருவதாகவும் தெரிவித்தார்
 
மேலும் தமிழக அரசு, மத்திய அரசு கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் சிறப்பாக ஈடுபட்டு வருவதாகவும் அவர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்வதாகவும் கூறினார். மக்களாகிய நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அரசு அறிவிக்கும் வழிமுறைகளை கடைபிடித்து கூடுமானவரை வெளியே செல்லாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரேநாளில் நடிகர் வரதராஜன் திடீர் பல்டி அடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது