செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 8 ஜூன் 2020 (15:53 IST)

வீடுகளில் தனிமைப்படுத்துவதா? அன்புமணி காட்டம்!

கொரோனா தொற்று உள்ளவர்களை வீட்டில் தனிமைப்படுத்த கூடாது என அன்புமணி ராமதாஸ் கோரியுள்ளார்.
 
அவர் கூறியுள்ளதாவது, கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்காமல், வீடுகளிலேயே தங்கவைப்பது நோய் தொற்றை மேலும் அதிகரிக்கும்.
 
வீடுகளில் உள்ள பெரும்பாலான நோயாளிகளுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதி இல்லை. நோயாளிகள் பொதுக்கழிப்பறை போன்ற இடங்களை பயன்படுத்தும் போது கொரோனா வேகமாக பரவுகிறது. 
 
எனவே வீடுகளில் தனிமைப்படுத்துவதை விட்டுவிட்டு, நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்தால்தான் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.