வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 27 ஜூன் 2019 (22:46 IST)

அபிராமியை பழிவாங்க மீராவுக்கு கிடைத்த சான்ஸ்: விடுவாரா?

பிக்பாஸ் வீட்டிற்குள் மீராமிதுன் வந்த முதல் நாளே அவர் மீது வெறுப்பை காட்டியவர் அபிராமி. அடுத்த நாள் காலையில் வனிதா, சாக்சி, ரேஷ்மா, ஷெரின் ஆகியோர்களின் ஆதரவுடன் மீராவுடன் சண்டை போட்டு அவரை அழ வைத்தவர். இதனையடுத்து இதற்கு பழிவாங்க மீரா தக்க சமயத்தை எதிர்நோக்கி கொண்டிருந்தார்
 
அந்த சமயம் சரியாக இன்று அவருக்கு கிடைத்தது. இன்று மீரா அனைவருக்கும் ரேம்வாக் சொல்லி கொடுக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து அனைவருக்கும்  ரேம்வாக் சொல்லி கொடுத்த மீரா, அபிராமியை மட்டும் அவர் செய்தது சரியில்லை என கூறி மீண்டும் மீண்டும் ரேம்வாக் நடக்க வைத்து தனது பழியை தீர்த்து கொண்டார்.
 
அதேபோல் பாத்திமாபாபுவிடம் அபிராமி குறித்து மீராமிதுன் குற்றம் குறையை கூறிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த அபிராமி, ஒரு கிளாஸில் தண்ணீர் கொடுத்து சமாதானமாக முயன்றார். ஆனால் எனக்கு ஏற்கனவே அபிராமியை தெரியும் என்றும், நான் பார்த்த அபிராமி வேறு என்றும் கூறி அவரது சமாதானத்தை ஏற்க மறுத்தார். எனவே அபிராமி-மிதுன் மோதல் தொடர்ந்து வருகிறது என்றே தெரிகிறது